ஊர்கள் இழந்து
உறவுகள் மறந்து
உயிர்கள் சுமந்த
உடல்கள்
முகங்கள் அழிந்து
தமிழை மறந்து
கால்கள் போன
தேசம்
கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகி
வெடிக்குது ஈர
இதயம்
பந்தம் அறுந்து
சொந்தம் விலகி
கிளைகள் விழ்ந்த
விருட்சம்
இறக்கைகளின்றி
பறக்க துடிக்கும்
பாசம் என்னும்
வேகம்
உள்ளம் உருகி
வெள்ளம் பெருகி
ஓடட்டும் அன்பு
ஊற்றாய்
நினைவுகள் யாவும்
நிழலாய்த் தொடரும்
நீங்கிடது உங்கள்
உறவு
No comments:
Post a Comment
Thanks