Monday, January 22, 2007

இலக்கியப்பெண்




செம்பருத்தி பூ இதழால்
செம்பவள வாய் திறவாய்

கரு வண்டுக் கண் அழகி
கடைக் கண்ணால் பார்த்திடுவாய்

கருங்கூந்தல் தேன் குழலி
கருணை உள்ளம் கொண்டிடுவாய்

மல்லிகைக் கொடி இடையாள்
மன்மதக் கணை விடுவாய்

சந்தனப் பாதத்தால் பல
சந்தங்கள் சேர்த்திடுவாய்

அன்னத்தின் நடை அழகால்
நற்பாதம் பதித்திடுவாய்

எங்கள் நெஞ்சத்தில்
நர்த்தனம் ஆடிடுவாய்

Monday, January 15, 2007

அம்மா

அன்புக்கு
இலக்கணமும் நீ தான்

தமிழ் பண்புக்கு
புததகமும் நீ தான்

கற்புக்கு
கண்ணகியும் நீ தான்

பொறுமைக்கு
பூமியும் நீ தான்

கண்டிப்பதில்
தந்தையும் நீ தான்

அன்புக்கு அன்னை
திரேசாவும் நீ தான்

படி என்று சொல்லவதற்கு
ஆசானும் நீ தான்

வீட்டில் இரட்சியத்துக்கு
அரசியும் நீ தான்

அன்போடு பேசும்
தோழியும் நீ தான்

பூமியில் வாழும் உயிர் உள்ள
தெய்வமும் நீ தான்