
விழுந்தவனைத்தான்−இங்கு
மாடும் ஏறி மிதிக்குது
நொந்தவன் புண்ணில்
அம்பு வந்து குத்துது
சுமைதாங்கி மீதுதான்
இடியும் வந்து விழுகுது
கட்டிய மனக்கோட்டை
சுக்கு நூறாய் போகுது
பரதேசி போலத்தான்
இந்த உயிரும் சுத்துது
கால்கள் போன போக்கிலே
இந்த உயிர் போகுது
வாழ்க்கை என்பதே
அர்த்தமின்றி போனது
முடிவு உள்ள வாழ்கையில்
முன்னேற மனம் துடிக்குது
பரந்த உலகில் இறக்கை−இன்றி
பறக்கத் துடிக்குது
கிடைத்தே போதும்−என்று
மனமும் தடுக்குது
No comments:
Post a Comment