Saturday, April 19, 2008

கனவில் வந்தவளே



குயிலே பாட மறுக்கின்றதே
அன்பே அன்பே...
உன் இனிய குரல் கேட்டதினாலே
பெண்ணே பெண்ணே...

மயில்கூடா நடைபயில
நானுகின்றதே...
உன் நடைஅழகைக் கண்டதினாலே
கண்ணே கண்ணே...

என் பார்வை நான் இழந்தேன்
என்னவளே...
உன் பார்வை என் மீது
பட்டதினாலே...

என் மூச்சை நானும் இங்கே
இழந்தேன் இழந்தேன்...
உன் மூச்சு என் மீது
பட்டதினாலே...

உன் கூந்தல் மலர் வாசம்
என்றேன் என்றேன்...
உன்கூந்தல் வாசம் தனில் எனை
இழந்த்தினாலே...

கறுப்பும் அழகு என்றேன்
பெண்ணே பெண்ணே...
உன்னை நான் கண்டதினாலே
அன்பே அன்பே...

என்னை நான் இழந்து உன்னைத்
தேடுகின்றேன்...
காணவில்லை என்னவளே
நீயும் எங்கே எங்கே....

கனவில் வந்த தேவதையோ
பெண்ணே பெண்ணே...

No comments: