
கடற்கரைச் சாலையோரம்
அந்தி சாயும் மாலை நேரம்
கடல் மகள் கலைந்த கோலம்
கண்களில் காதல் ஜாலம்
அலைகளின் ஆட்டம் எல்லாம்
கரைகளை கரைத்து சீண்டும்
கடலிடை நாரைக்கூட்டம்
காத்திடும் இரைகள் தேட
மணலிலே நண்டுக்குடைகள்
கடலுடன் தூது பேசும்
தவழ்ந்திடும் தென்றல் காற்று
உடலதை வருடிச்செல்லும்
கரைந்திடும் காக்கை
உறைவிடம் நாடிச்செல்லும்
இயல் இசைக்கவிதையாக
இயற்கையைப் போற்றிப்பாடும்
No comments:
Post a Comment