Saturday, April 19, 2008

நகைப்பு

எத்தனை நகைப்பொலிகள்
இன்னும் என்காதுகளில்

சிரிக்கட்டும் விட்டுவிடு
சீர்கெட்ட உலகம் இது

ஒடும் படைகளினது
வெற்று வேட்டொலிகள்

துளைக்காது உன் இதயம்
போகட்டும் விட்டுவிடு

சிரித்தவன் இன்று இங்கே
சிறந்தவள் என்கின்றான்

சிரிக்கிறேன் நான் இங்கே
என் ஒலி கேட்கிறதா?

No comments: