Saturday, April 19, 2008

இந்த நாள் எப்போது



யுத்த மேகங்கள்
கலைந்து-வானில்

குண்டு மழைகள்
ஓய்ந்து-அடங்கி

மரணத்தின் ஓலங்கள்
மறைந்து-ஓடி

இரத்ததின் ஆறுகள்
இமைகள்- மூடி

நரபலி மனிதனின்
பற்கள்-விழுந்து

புரையோடிய மக்கள்
கொள்கைகள்-மாறி

இன்றுதான் பிறந்தோம்
என்று-கூறி

பறவைகள் வானில்
இனியகானம்-பாடி

பொன்மணி நெற்கள்
கொழித்து-விளைந்து

பிறந்த பூமியில்
உறவுகள்-கூடி

இனிமையாகும்
அந்நாள்-எந்நாள்

No comments: