மழைத்துளியின் சோகங்கள்
மண்ணுக்குத் தெரிவதில்லை
மழலையின் இனிய மொழி
மற்றவர்க்குப் புரிவதில்லை
மலர்களின் வாசம் தன்னை
மலர்க் கூந்தல் அறிவதில்லை
மங்கையின் மன ஆழத்தை
மன்மதனும் அறிந்ததில்லை
இதயத்தின் உணர்வுகளை
இதயங்கள் உணர்வதில்லை
தந்தையின் சுமைகள்
இளமையில் புரிவதில்லை
தாயின் அன்புதன்னை
அருகில் உள்ளபோது புரிவதில்லை
கண்ணீரில் ஈர வலிகள்
கண்களுக்குப் புரிவதில்லை
உடலின் முடிவுதன்னை
உணர்வுக்குப் புரிவதில்லை
காலனின் வருகைதன்னை− எம்
காலத்துக்கும் தெரிவதில்லை
காதலின் வலிகள்
காமுகர்க்குப் புரிவதில்லை
நட்பின் இலக்கணம்
நய வஞ்சகர்க்குப் புரிவதில்லை
No comments:
Post a Comment