Saturday, April 19, 2008

ஞாபகம் இருக்கிறதா

என் உயிரே
காதல் செய்தாயே-என்னை
ஞாபகம் இருக்கிறதா

நான் உன் மீது
பைத்தியமாகும் வரை
காதல் செய்தாயே
ஞாபகம் இருக்கிறதா

நாம் கற்பனையில்
வாழ்வதாக-பல
கதைகள் சொன்னாயே
ஞாபகம் இருக்கிறதா

நான் உன்னை
புரிந்து கொள்ள வைத்தாயே
ஞாபகம் இருக்கிறதா

காலத்தின் கோலத்தால்
நான் உன்னை
பிரிந்து வந்தேனே
ஞாபகம் இருக்கிறதா

பிரிந்து இருப்பதிலும்
ஒருவித சுகம்
உண்டு என்றாயே
ஞாபகம் இருக்கிறதா

தொலைபேசியில்-நாம்
மணிக்கணக்கில்
பேசியது எல்லாம்
ஞாபகம் இருக்கிறதா

நான் அனுப்பிய-காசில்
நீ உன்னை அலங்கரித்தது
ஞாபகம் இருக்கிறதா

நான் அனுப்பிய
சட்டையை போட்டு போஸ்
கொடுத்து படம் எடுத்தது
ஞாபகம் இருக்கிறதா

எந்த எதிர்ப்பு வந்தாலும்
நான் உன் கூடத்தான்
வாழ்வேன் என்றாயே
ஞாபகம் இருக்கிறதா

இப்போது நீ
ஏன் என்னை
சேர மறுக்கின்றாய்?

காதலிக்கும் போது
இருந்த துணிவு
இப்போது ஏன்
உனக்கு இல்லை

அப்பா அம்மாவை
கேட்டா நீ என்னை
காதலித்தாய்

ஜாதி சமயம்
பார்த்தா நீ என்னை
காதலித்தாய்

கறுப்பு வெள்ளை
பார்த்தா நீ என்னை
காதலித்தாய்

என்னால் என் இதயத்தை
மாற்ற முடியவிலை
உன்னால் எப்படி முடிகிறது

நீ ஏன் என்னை
வெறுக்கின்றாய்
நான் இன்னும் உன்னை
வெறுக்கவில்லை

No comments: