எழுதாமறையாக இருந்தவனை
எழுதவைத்த நட்புக்கு நன்றி
குடத்துள் விளக்காக இருந்தவனை
குன்றிலே ஏற்றிவைத்தீர் நன்றி
நண்பனாக வந்த என்னை
உன் இதயதில் அணணாவாக
இடம் தந்தாய் நன்றி
நம் நட்புக்கு பாலமாக இருந்த
அந்த மலர்களுக்கும் நன்றி
கூண்டுக் கிளிபோல இருந்த-என்
சிந்தனையை சிறகுகள் விரித்து
பறக்கவைத்தாய் நன்றி
வீணாக இருந்த என் பேனாவுக்கு
ஒரு அர்த்தம் கொடுத்தாய் நன்றி
அன்புக்கு நன்றி சொல்ல என்
கவி நயதில் வார்தைகள் இல்லை
நன்றி
No comments:
Post a Comment